வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 10) ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது மழை நீர் தேங்கி இருப்பதை கவனிக்காமல் சென்ற கார், நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறியது.
அதன்பின் எதிர் திசையில் சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயனித்த மூன்று பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மீதமுள்ள இருவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனிப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்தில் சிக்கியவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மது வாங்க கள்ள நோட்டு - இளைஞர் கைது..