வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 908 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் அஞ்சலகம் மூலமாகவும், வங்கிகள் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான உதவித்தொகைகள் சம்பந்தப்பட்ட வங்கி தொடர்பாளர்கள் மூலமாகவும், அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் வீட்டிற்கே வந்து வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அப்படி வழங்க செல்லும் ஊழியர்களுக்குத் தேவையான கிருமிநாசினி, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிவாரண பொருள்கள் டோக்கன் வீட்டில் வழங்கப்படும் -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!