ETV Bharat / state

நா கூசாமல் பேசிய துரைமுருகனுக்கு கண்டனம் - ஓபிஎஸ்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

'திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு'

author img

By

Published : Oct 2, 2021, 4:24 PM IST

வேலூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் காட்பாடியில் இன்று (அக். 2) நடைபெற்றது.

இதில் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

'திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு'

அப்போது ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது, "அதிமுக தொண்டன் எனச் சொன்னால் பொதுமக்களிடம் பெரும் மரியாதை உள்ளது. இது எந்தக் கட்சிக்கும் கிடையாது. திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. அமைச்சர் துரைமுருகன் கடந்த சில நாள்களுக்கு முன் எம்ஜிஆரைப் பற்றி நா கூசாமல் அவராகப் பேசியுள்ளார்.

அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெறும் வெற்றி அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அடுத்த சில மாதங்களில் நகராட்சித் தேர்தல் வருகிறது. அதிலும் அதிமுக வெற்றிவாகைச் சூடும்.

சில அரசியல் காரணங்களால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பழுது - உடனடியாக குடியிருப்பு வாசிகள் வெளியேறும்படி நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.