ETV Bharat / state

டிக்கெட் எடுக்காமல் ரயில் கழிவறையில் வடமாநில இளைஞர் 2 நாள் பயணம்.. லாக்கை உடைத்து பிடித்து போலீஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 12:25 PM IST

Updated : Aug 22, 2023, 4:41 PM IST

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் கழிவறையை பூட்டி பயணித்த வட மாநில இளைஞரை போலீசார் கழிவறை கதவை உடைத்து மீட்டனர். மேலும் வட மாநில இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

a
டிக்கெட் இன்றி ரயில் கழிவறையில் பயணம் செய்த வட மாநில இளைஞர்
டிக்கெட் இன்றி ரயில் கழிவறையில் வடமாநில தொழிலாளர் 2 நாட்கள் பயணம்

வேலூர்: எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் 2 நாட்களாக கழிவறைக்குள் பூட்டிய படி, பட்டினியோடு பயணம் செய்த வட மாநில இளைஞரை அரக்கோணத்தில் ஆர்பிஎப் போலீசார் கதவை உடைத்து மீட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து (வண்டி எண் 18189) எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட். 20) காலை 5.30 மணிக்கு டாட்டா நகரில் புறப்பட்டது. அப்போது எஸ் 2 கோச் கழிவறை கதவு மூடப்பட்டிருந்தது. கழிவறை கதவு திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரமல்ல. ஒரு நாளும் கடந்தது. 2 வது நாளும் கடந்தது.

ஆனாலும் அந்த கழிவறையின் கதவு திறக்கப்படவே இல்லை. இதற்கிடையே ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. கழிவறை கதவு திறக்கப்படாதது குறித்து எஸ்-2 கோச்சில் பயணம் செய்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் அரக்கோணம் ஸ்டேஷனில் மதியம் 2 மணி 6 நிமிடங்களுக்கு வந்து நின்றது. இதைத் தொடர்ந்து கையில் ஸ்க்ரூ டிரைவர் மற்றும் சுத்தியலுடன் தயாராக நின்று கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகம் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அரக்கோணத்தில் எஸ் -2 கோச்சில் ஏறி கதவை திறக்குமாறு தொடர்ந்து தட்டினர்.

ஆனாலும் கழிவறை கதவு திறக்கப்படவே இல்லை. இதைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் கழிவறையின் கதவின் லாக் உடைத்து போலீசார் திறந்தனர். அப்போது கழிவறையினுள் 18 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் இருந்தார். போலீசார் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த வட மாநில இளைஞரிடம் டிக்கெட் எதுவும் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்டு கீழே இறக்கிய போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் சோகன் தாஸ் என்று மட்டும் தெரிந்தது. மேலும் அந்த நபர் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் போல் அறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரயில் அரக்கோணத்தில் இருந்து 15 நிமிட காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அதே நேரம் தொடர்ந்து இந்தியிலேயே வட மாநில இளைஞர் பேசிக் கொண்டிருந்ததால் வேறு எந்த தகவலும் அவரிடம் இருந்து பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

அரக்கோணம் ஆர்பிஎப் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்கெட் இல்லாமல் ரயில் கழிவறைக்குள் புகுந்த வட மாநில இளைஞர் கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயே பசி பட்டினியோடு பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?

Last Updated : Aug 22, 2023, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.