ETV Bharat / state

'கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் யாரும் தீவிர சிகிச்சை நிலைக்கு செல்லவில்லை'- சிஎம்சி மருத்துவமனை - கோவிஷீல்டு

வேலூர்: 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களில் 94 விழுக்காடு பேர் தீவிர சிகிச்சை நிலைக்கு செல்வதில்லை என சிஎம்சி மருத்துவமனை நடத்திய ஆய்வில் வெளியாகியது.

கரோனா
கோவிஷீல்டு தடுப்பூசி
author img

By

Published : Jun 12, 2021, 2:06 AM IST

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றின் வீரியத்திலிருந்து தப்பிக்கவும் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது.

இந்தியாவில் தற்போது வரை சீரம் இன்ஸ்டியூட்டால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், இந்தியாவிலேயே தயாரான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தத் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் ஜாய் மேமன், பீட்டர் ஜான் விக்டர், பிரசாத் மேத்யூஸ், ஹேமா பால், மாலதி முருகேசன் ஆகிய ஐந்து மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் படி, வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலுள்ள 10 ஆயிரத்து 600 மொத்த பணியாளர்களில், 8 ஆயிரத்து 991 பணியாளர்களுக்கு (சுமார் 84.8%) ஜனவரி 21, 2021 முதல் ஏப்ரல் 30, 2021 வரை தடுப்பூசி போடப்பட்டது. இதில் 93.4 விழுக்காடு பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், மற்றவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது.

அச்சமயம் கோவாக்சின் தடுப்பூசி பெரியளவில் கிடைக்காமல் இருந்ததாலும், இருப்பு இல்லாமல் இருந்ததாலும் குறைவானவர்களுக்கே கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இதில் பிப்ரவரி 21, 2021 முதல் மே19, 2021 வரை ஆர்டிபிசிஆர் (RTPCR) பரிசோதனையின் மூலம் கரோனா பரிசோதனை மோற்கொண்டதில் அறிகுறியுடன் ஆயிரத்து 350 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

3 பெண்களுக்கு 2 ஆண் என்ற விகித்தத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 350 பேரில் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் பாதிக்கப்பட்டோர் 94 விழுக்காடு பேர் ஐசியு செல்வது தடுக்கப்படுவதாகவும், 77 விழுக்காடு பேர் மருத்துவமனைக்கு செல்வது தடுக்கப்படுவதாகவும், 65 விழுக்காடு பேருக்கு கரோனா தொற்று வராமல் தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல கோவாக்சின் தடுப்பூசி குறைந்த அளவு பணியாளர்களுக்கே செலுத்தப்பட்டதால், கோவிஷீல்டு- கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கான செயல்திறனை ஒப்பிட முடியவில்லை என்றும், ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.