வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (32). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புவனேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து மகேஷ்குமார் கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த பொதுமக்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.
இதையடுத்து, மகேஷ்குமார் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மகேஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகேஷ் குமார் தனது மனைவியை மேலே இருந்து தள்ளி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும், இதை கவனித்த பொதுமக்கள் தடுத்து விட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் மகேஷ் மட்டும் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக மகேஷ்குமார் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.