வேலூர்: வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான பொருட்களை தயாரிக்க மாணவர்கள் முன் வர வேண்டும் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு தலைவர் விஞ்ஞானி எஸ்.கே. வர்ஷ்னி அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 'தேசிய அறிவுசார் விழா' கடந்த 22 ஆம் தேதி துவங்கியது. இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று (செப். 24) மாலை விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு தலைவர் விஞ்ஞானி எஸ்.கே. வர்ஷ்னி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், "பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை தவிர வெளிப்படையான புதிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவுத்திறமையை கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். நாட்டில் தற்போது புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தில் கருவிகளை உருவாக்கப்படும் பொழுது அவை தரமானதாக இருக்க வேண்டும்.
புதிய பொருட்களை உருவாக்கப்படும் போது மாணவர்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொருட்களின் உற்பத்தி, மற்றும் தரம் அதிகரிக்கும். இன்றைக்கு நாட்டில் பல்வேறு புதிய பொருட்கள் உற்பத்தி சந்தைகளில் காணப்படுகின்றன.
இதையும் படிங்க: தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!
மக்கள் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கேற்ப பொருட்களின் உற்பத்தி திறனும் மேம்பட வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்ள நாட்டில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
'சந்திரயான் 3'ஐ உருவாக்கிய பொறியாளர்கள் சாதாரண பள்ளிக் கல்லூரிகளில் படித்தவர்கள் தான். அவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டார்கள். எனவே மாணவர்கள் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்" என்று அவர் கூறினார்.
-
Here goes the closure of the 14th edition of #graVITas23 with its valedictory ceremony!
— VIT University (@VIT_univ) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
See you in 2024!@skvdst@GraVITas_VIT#VIT #graVITas #graVITas2023 #UnleashYourGenius #Venture_Inspire_Transform #CollegeLife #TechFest pic.twitter.com/KrcUOWpTiw
">Here goes the closure of the 14th edition of #graVITas23 with its valedictory ceremony!
— VIT University (@VIT_univ) September 24, 2023
See you in 2024!@skvdst@GraVITas_VIT#VIT #graVITas #graVITas2023 #UnleashYourGenius #Venture_Inspire_Transform #CollegeLife #TechFest pic.twitter.com/KrcUOWpTiwHere goes the closure of the 14th edition of #graVITas23 with its valedictory ceremony!
— VIT University (@VIT_univ) September 24, 2023
See you in 2024!@skvdst@GraVITas_VIT#VIT #graVITas #graVITas2023 #UnleashYourGenius #Venture_Inspire_Transform #CollegeLife #TechFest pic.twitter.com/KrcUOWpTiw
இந்த நிகழ்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும், விஞ்ஞானி எஸ்.கே. வர்ஷ்னி வழங்கினார். நிகழ்ச்சியில் எச்.பி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் இந்திய பிரிவின் தலைவர் மனோஜ் கிருஷ்ணா, சுசீலா உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" - பாடும் நிலா எஸ்பிபி நினைவு தினம்!