ETV Bharat / state

வேலூரில் வெடித்த மர்மப் பொருள்? - நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த தம்பதி - vellore blast news update

வேலூர்: ஆற்காடு அருகே உள்ள சாய்பாபா நகர் குடியிருப்புப் பகுதியில் பயங்கர வெளி சத்தம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

mysterious material exploded in vellore
author img

By

Published : Sep 24, 2019, 3:12 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சாய்பாபா நகர் குடியிருப்புப் பகுதியில் அரசு மருத்துவர் கீர்த்தி ராஜன் வசித்துவருகிறார். இவரது வீட்டில் இன்று அதிகாலை பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் ஜன்னல்களும் கதவுகளும் பெயர்ந்துவந்ததோடு ஆங்காங்கே சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டிருக்கிறது. அறையில் தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தி ராஜன் மற்றும் அவரது மனைவி எவ்வித காயங்களும் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

வேலூரில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்ததோடு, விபத்திற்கு காரணம் மர்மபொருள்தானா அல்லது வாயுக்கசிவாக இருக்குமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:வேலூர் மாவட்டம்

ஆற்காடு அருகே டாக்டர் வீட்டில் அதிகாலை பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் வெடித்ததில் டிவி சோபா ஆகியவை எரிந்து நாசம் - போலீசார் தீவிர விசாரணைBody:வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சாய்பாபா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அரசு மருத்துர் கீர்த்தி ராஜன். இவரது வீட்டில் வீட்டில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது.வீட்டிற்குப் பின்புறமாக நடந்த இந்த வெடி விபத்தில் ஜன்னல்களும் கதவுகளும் பெயர்ந்து வந்ததோடு ஆங்காங்கே சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டிருக்கிறது.
         டிவி சோபாக்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் அடைந்திருக்கும் நிலையில் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தி ராஜன் மற்றும் அவரது மனைவி எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த இராணிப்பேட்டை டி.எஸ்.பி.கீதா, மற்றும் ஆற்காடு ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடித்த வீட்டை பார்வையிட்டு தடயங்களை சேகரித்ததோடு வெடிவிபத்திற்கு காரணம் மர்மபொருள் வெடித்ததா அல்லது வாயுக்கசிவாக இருக்குமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.