வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப. முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காளிதாஸூம்(27), அதே பகுதியைச் சேர்ந்த பலராமனின் மகள் ஐஸ்வர்யாவும் (24) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸின் உறவினர்கள், பலராமன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் பலராமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டதால், இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.