ETV Bharat / state

இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை! - குழந்தைளுக்கு விஷம்

திருப்பத்தூர்: திருமணத்திற்கு மீறிய உறவை கணவன் கைவிட மறுத்ததால், விரக்தியில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
author img

By

Published : Mar 28, 2019, 1:06 PM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொல்லாங்குட்டை கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்; கூலித் தொழிலாளி. வேலை செய்யும் இடத்தில் ஜெயக்குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜெயக்குமாரின் மனைவி மேனகாவிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேனகா தனது கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும், அந்த உறவினைத் தொடர்ந்துள்ளார்.

இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தவறுகளைத் திருத்திக்கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழும்படி பலமுறை கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததால், மனமுடைந்த மேனகா தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கந்தலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மனைவி , இரண்டு குழந்தைகள் மரணத்திற்கு காரணமான ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூரில் இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருப்பத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொல்லாங்குட்டை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார்.

வேலை செய்யும் இடத்தில் ஜெயக்குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜெயக்குமாரின் மனைவி மேனகாவிற்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து மேனகா தனது கணவரிடம் கேட்டுள்ளார் ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் கள்ளக்காதலினை தொடர்ந்துள்ளார்.

மீண்டும் மீண்டும் தனது கணவரிடம் தவறுகளை உணர்ந்து வாழ வேண்டும் என பல முறை கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது, இதில் மனமுடைந்த மேனகா தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கந்தலி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மூன்று பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.