ETV Bharat / state

ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் தாய், மகள் உயிரிழப்பு - தேசிய மீட்பு படையினர்

வேலூர் மாவட்டத்தில் காகிதப்பட்டறை பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தாயும், மகளும் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் காகிதப்பட்டறை பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் ராட்சத பாறை சரிந்ததில் தாய், மகள் உயிரிழப்பு
ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தாய். மகள் உயிரிழப்பு
author img

By

Published : Nov 15, 2021, 1:16 PM IST

Updated : Nov 15, 2021, 4:28 PM IST

வேலூர்: வடகிழக்குப் பருவ மழையால் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 14) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள காகிதப்பட்டறை டான்சி பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் மாலை 4 மணியளவில் பெய்த தொடர் மழையின் விளைவாக மணல் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை ஒரு வீட்டின் மீது விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கிய தாய், மகள்

பாறை விழுந்த வீட்டில் பிச்சாண்டி (60) என்பவர் குடும்பமாக வசித்துவந்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் பிச்சாண்டியின் மனைவி ரமணி (50), அவரது மகள் நிஷாந்தி (24) இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

பாறை விழுந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, 20-க்கும் மேற்பட்ட வேலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்புப் பணியைத் தொடங்கினர்.

உயிரிழப்பு

இதனைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் ரமணியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி ரமணி உயிரிழந்தார். இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் மீட்புப் பணியைப் பார்வையிட்டனர்.

பின்னர், அரக்கோணத்திலிருந்து இரண்டு குழுக்களைக் கொண்ட 30 தேசிய மீட்புப் படையினர் (National Disaster Response Force), மூன்று மோப்ப நாய்களுடன் நிஷாந்தியைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

பின்னர் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த நிஷாந்தியை தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் (National Disaster Response Force) சடலமாக மீட்டனர். உயிரிழந்த இருவரின் உடல் உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் இத்தகைய அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையில் அப்பகுதி மக்கள் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள அரசு நகராட்சிப் பள்ளியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தொடர்மழையால் ஏற்காட்டில் ராட்சத பாறை உருண்டு விபத்து

Last Updated : Nov 15, 2021, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.