ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 1300 வாக்குச்சாவடிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

Vellore constituency: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்கு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) வெளியிட்டார்.

வேலூர் வரைவு வாக்கு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர்  வெளியிட்டார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 6:39 PM IST

வேலூர்: மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 1300 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இன்று (ஆகஸ்ட் 21ஆம் தேதி) வெளியிட்டார்.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு 2024 இன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 1300 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024க்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 17.10.2023 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு 1.1.2024இல் 18 வயது நிறைவு பெற்றவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பெயர், வயது மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் கால அட்டவணை அளித்து உள்ளது.

அதன் அடிப்படையில், சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச் சாவடிகள் வரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியல், அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகமான வேலூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், வேலூர் வருவாய் கோட்ட அலுவலகம், குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளன.

இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு இந்த பட்டியலில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் 7 நாட்களுக்குள் அளிக்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பி.விஜயராகவன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : 90th year anniversary of Mettur Dam: 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.