ETV Bharat / state

பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி ஆற்றில் இறங்கிய பொதுமக்கள் - 50க்கும் மேற்பட்டோர் போராட்டம்

வேலூர்: குடியாத்தத்தில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். thumbnail is irrelevent, visual is some problem, ask the reporter to resend and attach please.

பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் போராட்டம்
author img

By

Published : May 14, 2019, 8:15 AM IST

வேலூர் மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் பாலாறில் கடந்த சில ஆண்டுகளாக மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.

இதனால் குடியாத்தம் அருகே 50-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணல் கொள்ளையடிப்பதால் ஆற்றில் சுரங்கம் போல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்கள் இயற்கை கடனை கழிப்பதற்காக ஆற்று பகுதிக்கு செல்லும்போது மணல் கொள்ளையர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் மழை நேரங்களில், தண்ணீர் ஆற்றைவிட்டு கரைக்கு மேல் வந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

எனவே மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மேலும் கொள்ளையடிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தானர்.

Intro:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்

மணல் கொள்ளையை தடுக்கக் கோரி பொதுமக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்

Body:வேலூர் மாவட்டத்தில் பாலாறு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது ஆனால் சில ஆண்டுகளாக இங்கு மணல் கொள்ளை அதிகரித்துள்ளதால் ஆற்றின் வளம் சீரழிந்து வருகிறது குறிப்பாக அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி ஊர் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதன்படி குடியாத்தம் அடுத்த அக்ரகாரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கவுண்டன் மகாநதி ஆற்றோரம் வசித்து வருகின்றனர் இங்கு பல ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது இதனால் ஆற்றில் சுரங்கம் போல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன இப்பகுதி பெண்கள் தங்கள் உடல் பாதைகளை கழிப்பதற்காக ஆற்று பகுதிக்கு செல்லும் போது மணல் கொள்ளையர்களால் அச்சுறுத்தல் இருப்பதாக புகார் தெரிவித்தனர் மேலும் சிறுவர்கள் விளையாடும் போது மணல் சரிந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது ஆற்றில் மழை நேரங்களில் அதிகமாக தண்ணீர் வரும்போது ஆற்று கரையோரம் உள்ள வீடுகளுக்கும் பாதிப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர் எனவே மணல் கொள்ளையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.