வேலூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 லட்ச ரூபாயுடன் சிக்கிய பாமக, அதிமுகவை சேர்ந்த மூவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மக்கான் சிக்னலில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று (ஏப்ரல். 04) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பாமக வேலூர் மத்திய மாவட்ட தலைவர் புருசோத்தமன் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், காரின் பின் பகுதில் பாமக கட்சித் துண்டு, அக்கட்சி தலைவர்களின் படம் பொறுந்திய துண்டு பிரசுரங்கள் மற்றும் அணைகட்டு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இழவலகனின் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டன.
கார் உடன் அனைத்தையும் பறிமுதல் செய்த அலுவலர்கள், அதிமுக, பாமகவை சேர்ந்த 3 பேரை பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.