ETV Bharat / state

காவல்துறை டூ உச்சநீதிமன்றம்: அண்ணாநகர் சிறுமி போக்சோ வழக்கு.. கடந்து வந்த பாதை! - SUPREME COURT

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க எஸ்ஐடி (SIT) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 7:15 AM IST

சென்னை: அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சிறப்பு காவல்துறை விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமியின் மீது கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. அதையறிந்த சிறுமியின் தாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையித்திற்கு தகவல்கள் தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினரிடம் சிறுமியின் தாய் அளித்த புகார் அளித்துள்ளார்.

ஒருதலைபட்ச விசாரணை: சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வதற்கு முன், மருத்துவமனையிலேயே பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், அதை சிறுமியின் தாய்க்கு தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்தை வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியின் தாயை அடித்ததுடன் காவல்நிலையத்திலேயே இரவு 1 மணி வரை தங்க வைத்ததாகவும், மருத்துவமனைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை அண்ணாநகர் போக்சோ வழக்கு: எஸ்ஐடி அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சமரசத்துக்கு ஒத்து வராததால் அவரது கையை காவல்துறையினர் உடைத்து காவல் நிலையத்தில் காரணமின்றி வைத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் தாய் வழக்கறிஞர் உதவியுடன் காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

நீதிமன்றம் விசாரணை: இதுகுறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.

குழு அமைக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை வித்ததுடன் தமிழக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தினம்தோறும் விசாரணை நடத்த வேண்டும் எனவும், விசாரணை அறிக்கையை வாரம் ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.