வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூள் தெருவைச் சேர்ந்தவர்கள் தினேஷ் (30) - ஜீவிதா (25) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (செப். 23) ஜீவிதா தனது மகன்கள் நந்தகுமார் (5), பெயரிடப்படாத ஆறு மாதக் குழந்தை, அக்ஷயா (7) ஆகிய மூவரையும் துணியால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்துபோனவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வேலூர் உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து விசாரனை மேற்கொண்டார். தாயே தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்