ETV Bharat / state

'ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதால் பிரச்னை இல்லை'

வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கேசி வீரமணி
author img

By

Published : Jun 22, 2019, 4:38 PM IST

வேலூரில் இன்று அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுகவைச் சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியாக போராட்டங்களை அறிவித்து குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுவதாக பொய் பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார்கள். இன்று திமுகவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலூர் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகத்தை பற்றி கொச்சைப்படுத்தி பேசியுள்ளனர்.

அதிமுகவைப் பொறுத்தவரை இதில் உள்ள அனைத்து தொண்டர்களும் பக்திமான்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள். சென்னையில் குடிநீர் சிக்கலுக்காக திமுக போராட்டம் நடத்துகிறார்கள். அதிகம் மழையோ புயலோ வந்துவிட்டால் அதிமுக அரசுதான் காரணம் என்கிறார்கள்.

மழை வராவிட்டாலும் அதிமுக அரசுதான் காரணம் என்கிறார்கள். ஜெயலலிதா 2004இல் இல்லங்கள் தோறும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வந்தபோது கொச்சைப்படுத்தி பேசியவர்தான் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. அன்று அந்தத் திட்டத்தை உலகமே உற்று கவனித்தது. 2011இல் அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கே.சி வீரமணி செய்தியாளர் சந்திப்பு

வேலூரில் குடிநீர் பிரச்னை இல்லை. கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் ஆய்வு செய்துவருகிறார். திமுகவினர் கடந்தத் தேர்தலில் பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளை கொடுத்தனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தாராளமாக வரும் அந்த தண்ணீர்தான் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

கூட்டுக் குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் மக்கள் தொகை பெருக்கம் ஆனாலும் அடுத்த 30 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும் அளவுக்கு பெரும் திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நீரினால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் கிடையாது. உபரியாக இருக்கக்கூடிய தண்ணீரைத்தான் சென்னைக்கு அனுப்பஇருக்கிறார்கள்” என்றார்.

Intro:வேலூர் மாவட்டம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை திமுகவின் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் வேலூரில் அமைச்சர் வீரமணி பேட்டி
Body:வேலூரில் இன்று அமைச்சர் கே சி வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், " திமுகவைச் சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியாக போராட்டங்களை அறிவித்து குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுவதாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள் இன்று திமுகவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலூர் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகத்தை பற்றி கொச்சைப்படுத்தி பேசியுள்ளனர். அதிமுகவைப் பொறுத்தவரை இதில் உள்ள அனைத்து தொண்டர்களும் பக்திமான்கள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள். சென்னையில் குடிநீர் பிரச்சினைக்காக திமுக போராட்டம் நடத்துகிறார்கள் அதிகம் மழையோ புயலோ வந்துவிட்டாலும் அதிமுக அரசுதான் காரணம் என்கிறார்கள் மழை வராவிட்டாலும் அதிமுக அரசுதான் காரணம் என்கிறார்கள் ஜெயலலிதா 2004இல் இல்லங்கள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வந்தபோது கொச்சைப்படுத்தி பேசியவர் தான் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அன்று அந்த திட்டத்தை உலகமே உற்று கவனித்தது நமது மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவருவதற்கு திமுக திட்டத்தை மட்டுமே போட்டார்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தரவில்லை 2011ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது வேலூரில் குடிநீர் பிரச்சினை இல்லை கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். திமுகவினர் கடந்த தேர்தலில் பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளை கொடுத்தனர் ஆசை வார்த்தை காட்டி மக்களை திசை திருப்பி வாக்குகளைப் பெற்றுள்ளனர் திமுகவின் பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் இனி எடுபடாது ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது கூஎட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தாரளமாக வரும் அந்த தண்ணீரை தான் சென்னைக்கு அனுப்பப்படுகிறது அதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்க கூடிய அளவில் திமுகவினர் செய்தியை சொல்கிறார்கள் என்றால் அவர்களின் எண்ணமும் நோக்கமும் என்னவென்றே புரியவில்லை அவர்களைப் பொருத்தவரை பொய்யான குற்றங்களை மட்டும் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் ஏதாவது ஒரு குற்றத்தை சொல்லி மக்களை சந்திப்பதற்காக மக்களிடத்தில் திணிப்பதற்காக தங்களை ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் மக்கள் தொகை பெருக்கம் ஆனாலும் அடுத்த 30 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும் அளவுக்கு மீண்டும் நாம் அதை தேவையான அளவு தண்ணீர் வரக்கூடிய அளவுக்கு பெரும் திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது எனவே அந்த நீரினால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் கிடையாது உபரியாக இருக்கக் கூடிய தண்ணீரை தான் சென்னைக்கு அனுப்ப இருக்கிறார்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.