வாணியம்பாடியில் தனியார் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் 1757 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.
அதில், ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்ட உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்கினார். தற்போது அதே வழியில் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர், பணியின் போது இறந்தால் மட்டும் அல்ல, அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று சில நாட்கள் கழித்து மரணம் ஏற்பட்டாலும் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கட்டுமானத் தொழிலாளர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: மின்கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் வௌவால்கள் நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலா?