திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 135ஆவது காங்கிரஸ் நிறுவனர் நாளை முன்னிட்டு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி வணக்கம் செய்து இனிப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாக படிக்கவில்லை எனக் கூறி, அவருக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை அஞ்சல் மூலம் அனுப்பினார்.
இதையடுத்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அஸ்லாம் பாஷாவுக்கு அலைபேசி மூலமாக கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை நிர்வாகிகள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவரது வீட்டிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: ’பிரதமர் உரையை வீட்டிலிருந்து கேட்கலாம்’ - அமைச்சர் செங்கோட்டையன்