ETV Bharat / state

வேலூர் மக்களின் கனவு நிறைவேற்றப்படும்: கே.சி. வீரமணி

வேலூர்: வேலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

minister k.c.veeramani news
author img

By

Published : Aug 23, 2019, 10:31 PM IST

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் குப்பம், கத்தாரி, தோப்பலகுண்டா, பச்சூர், கொத்தூர், பந்தார பள்ளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகள் மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார்.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, ’மக்கள் அளித்துள்ள மனுக்களை அலுவலர்களால் விரைந்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது.

பொதுமக்கள் குறைகள் மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம்

வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றும் வகையில் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மூன்றாக பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாகவுள்ளன. மேலும், ஜோலார்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவான அரசு தொழில்நுட்பக் கல்லூரி உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Intro:Body:வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர்குப்பம், கத்தாரி, தோப்பலகுண்டா, பச்சூர், கொத்தூர், பந்தார பள்ளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைவில்உரிய நடவடிக்கைகள் எடுத்து உங்கள் குறைகளை விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.

அப்போது பேசிய அமைச்சர்.
தமிழ்நாட்டில் அம்மா வழியில் ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் எதிர் கட்சியினர் தமிழக அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் ஆனால் தமிழக அரசு மக்களுக்கான அரசாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது.

வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றும் வகையில் அம்மா வழியில் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மூன்றாக பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கித் தந்துள்ளார்.

அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நாட்டறம்பள்ளி தாலுகாவை உருவாக்கித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தொடர்ந்து ஜோலார்பேட்டை தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறிப்பாக குடிநீர் வசதி, சாலை வசதி, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான அரசு தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டு சிறப்பான ஒரு நல்லாட்சி அம்மா அரசு தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகிறது என பேசினார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.