ETV Bharat / state

ரஜினி, கமலை கடுமையாக சாடிய கே.சி.வீரமணி - rajini kamal political entry

திருப்பத்தூர்: "நடிகர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள். அவர்கள் எம்ஜிஆரின் படத்தை பார்த்துவிட்டு அதற்கு ஆசைப்பட வேண்டும்" என்று ரஜினி, கமலை அமைச்சர் கே.சி.வீரமணி மறைமுகமாக சாடியுள்ளார்.

minister veeramani
கே.சி.வீரமணி
author img

By

Published : Jan 25, 2020, 6:46 PM IST

திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழா, திருப்பத்தூரில் நடைபெற்றது. விழாவில் வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக் கொண்டார். அவர் பேசுகையில், "கருணாநிதி அன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது 100 நாட்கள், 200 நாட்களில் கலைந்து விடும் என்று கூறினார். அது போலவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின், தனது அப்பா போலவே கூறி வருகிறார்", என்றார்.

மேலும், "திமுக கட்சியை தீய சக்தி என்று எம்ஜிஆர் கூறினார். அவர் வளர்த்த அதிமுகவை இன்று தினகரன், திமுகவோடு கைகோர்த்து அழிக்க நினைக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. நடிகர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள். முதலில் எம்ஜிஆரின் படத்தை பார்த்து விட்டு வந்து முதலமைச்சராக ஆசைப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

Intro:Body:ரஜினி,ஸ்டாலின், மற்றும் தினகரன் ஆகியோர் மீது அமைச்சர் கே.சி.வீரமணி கடும் விமர்சனம்.....

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் நகர செயளாளர் டி.டி.குமார் தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் 103வது பிறந்த நாள் விழா திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் நடைப்பெற்றது.இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள்

அதிமுக கட்சியில் இருப்பதே பெருமை எனவும் இந்த உலகம் உள்ள வரை அதிமுகவின் புகழ் இருக்கும் என பேசிய அவர்...

கருணாநிதி அன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது 100நாட்கள் 200நாட்களில் கலைந்து விடும் என கூறினார். அது போலவே இன்று ஸ்டாலின் எடப்பாடி. பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து விடும் என அப்பா போலவே பிள்ளையும் கூறி வருகிறார்.

மேலும் இன்று நடிகர் எல்லாம் முதல்வராக ஆசைப்படுகிறார்கள் முதலில் எம்ஜிஆர் அவர்களின் படத்தை பார்த்து விட்டு வந்து முதல்வராக ஆசைப்பட வேண்டும் எனவும்

திமுக கட்சியை தீய சக்தி என கூறிய எம்ஜிஆர் அவர்கள் அவர் வளர்த்த அதிமுகவை இன்று தினகரன் திமுகவோடு கை கோர்த்து அழிக்க நினைக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என கடும் விமர்சனம் செய்தார்.

இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர் அமுதா மற்றும் அதிமுக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.