ETV Bharat / state

'தமிழ்நாட்டில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை' - அமைச்சர் கே.சி. வீரமணி!

வேலூர்: தமிழ்நாட்டில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

minister k c veeramani give Welfare assistance to the vellore people
author img

By

Published : Nov 15, 2019, 11:47 PM IST

முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்வு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையேற்றார்.

இதில், முதியோருக்கு உதவித்தொகை வழங்குதல், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வீரமணி வழங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், குறை தீர்வு முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்படும். ஒரு வேளை மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அது குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு பதிலளிக்கப்படும்.

காட்பாடி தொகுதியில் 1,341 பேருக்கும், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் 1,050 பேருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலேயே இந்த இரண்டு தொகுதிகளில் தான் அதிக பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகையை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்"என்றார்.

முன்னதாக அணைக்கட்டுப்பகுதியில் நடைபெற்ற இதே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது, தனது தொகுதியில் உள்ளவர்களுக்கு வேண்டும் என்றே நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுகிறது என்று அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் குற்றஞ்சாட்டியிருந்தார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் கே.சி. வீரமணி

இந்தச்சூழ்நிலையில் அவருக்குப் பதிலளிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில் அணைக்கட்டு, காட்பாடி சட்டப்பேரவை தொகுயில் தான் அதிக பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!

Intro:வேலூர் மாவட்டம்

திமுகவினர் பதவியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கே அதிக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது - அமைச்சர் கே சி வீரமணி பேச்சுBody:வேலூர் மாவட்டம்

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உட்பட பல்வேறு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் 1341 பெருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குதல் உட்பட இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சக்கரம் வாகனம் வழங்குதல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வீரமணி வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் நிகழ்ச்சியில் பேசும்போது, இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் ஒருவேளை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அது குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு பதிலளிக்கப்படும். இந்த விழாவில் 1341 பேருக்கு (காட்பாடி தொகுதி) முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது அதேபோல் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 1050 பேருக்கு முதியோர் தொகை வழங்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்திலேயே இந்த இரண்டு தொகுதிகளில் தான் அதிக பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது எனது தொகுதியான ஜோலார்பேட்டையில் கூட 550 பேருக்கு தான் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கூடுதலாக 5 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று பேசினார். முன்னதாக அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்ற இதே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது அத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருக்கும் அமைச்சர் கே சி வீரமணிக்கும் இடையே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையில் கடும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது அதாவது தனது தொகுதியில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றே நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அமைச்சரிடம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார் இந்த சூழ்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது நடைபெற்ற இந்த விழாவின்போது அமைச்சர் கே சி வீரமணி, அணைக்கட்டு மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தான் அதிக பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படுவதாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.