நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு மாசிமக திருவிழா 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது. அதில் மூலவர் தியாகராஜசுவாமி பஞ்சமூர்த்தி வேடத்தில் எழுந்தருளினார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வடம்பிடித்து இழுத்து விழாவைத் தொடங்கிவைத்தார். மேலும் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு