ETV Bharat / state

அதிமுக ஆட்சி காலத்தில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள்  மேற்கொள்ளவில்லை - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு - திமுக அமைச்சர் துரைமுருகன்

10 ஆண்டுகளாக அதிமுக அரசு நீர்நிலைகளில் எந்த பணியையும் செய்யவில்லை என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
author img

By

Published : Nov 25, 2021, 7:11 AM IST

வேலூரில் திமுக சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகியான நடேசனார் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவருக்கு மாலை அணிவித்து ஐந்து லட்சம் ரூபாய் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

அறிஞர் அண்ணாவோடு இருந்து இன்று வரையில் திமுகவில் அவர் அங்கம் வகித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்து நிதி வழங்கினார்.

இந்த விழாவில் கைத்தறி அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன், அமுலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.

பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "தற்போது அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வீணானது உண்மைதான். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக அரசு நீர்நிலைகளுக்காக எந்த பணியையும் செய்யவில்லை.

இதனால்தான் பாதிப்பு ஏற்பட்டது திமுக ஆட்சிக்கு வந்து ஆறுமாதகாலம் தான் ஆகிறது. எனவே இனி ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே நீரை தேக்கி வைக்க தடுப்பணைகளை கட்டும் நடவடிக்கையை மேற்கொள்வோம் வேலூர் பாலாற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் பேபி அணையை பலப்படுத்த கேரள அரசு அணையை பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள தடையாக உள்ள 30 மரங்களை வெட்டி அப்புறப்படுத்த கேரள வனத்துறை அனுமதியளித்து. தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியது.

ஆனால் கேரள அரசுக்கு தெரியாமல் கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக அது ரத்து செய்யப்பட்டது அமைச்சருக்கே தெரியாமல் அரசுக்கு தெரியாமலா இது வந்திருக்கும்.

இந்த விவகாரத்தில் கேரள அரசு நாடகமாடுகிறது. தமிழ்நாட்டில் ஏரிகள் ஆற்றோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உச்சநீதிமன்ற உத்தரவின் படி கட்சி பேதமின்றி ஆக்கிமிப்புகளை அகற்றுவோம். " என்றார்.

இதையும் படிங்க: Srilankan Tamil Refugees: உதவிகள் செய்ய நடவடிக்கை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.