வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டியில் காமராஜர் நகர், எம்ஜிஆர் நகர் ஆகியப்பகுதிகளில் பட்டியிலன மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அரசு சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மேல்பட்டியில் சுடுகாடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவர் அந்தச்சுடுகாட்டை ஆக்கிரமித்து வீடுகட்டி சடலங்களைப் புதைக்க விடாமல் பொதுமக்களை மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால், அலுவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிப்பதற்காக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.
இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் புகார் மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: 10ஆவது நாளை எட்டிய நளினியின் பட்டினிப் போராட்டம்!