திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலகிரி மலை சார்ந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்களுக்குப் பயன்படும்வகையில் பல்வேறு புதிய திட்டங்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் அறிவியல் பூங்காக்கள் உள்ளிட்ட பிரமாண்டமான கண்கவர் வகையில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வளைவுகள் போன்றவற்றை அமைத்தல், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஏலகிரி மலை முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க பேட்டரி கார்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், சார் ஆட்சியர் வந்தனா கர்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு வாபஸ்' - கனிமொழி கொந்தளிப்பு