ETV Bharat / state

லாரி பேட்டரிகள் திருட்டு: சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணை!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே லாரிகள் பழுதுபார்க்கும் கடையில் இருந்த லாரி பேட்டரிகளைத் திருடிச் சென்ற நபரை கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிருந்த காட்சியின் மூலம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

லாரி பேட்டரிகள் திருடும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Dec 27, 2019, 10:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டைப் பகுதியில் குமார் என்பருக்கு சொந்தமாக லாரி பாடி பில்டிங் ஒர்க் ஷாப் உள்ளது. இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இன்று (27-12-2019) கடைக்கு வந்த குமார், கடையின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள லாரிக்கு பொருத்தும் பேட்டரிகள், உதிரி பாகங்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

லாரி பேட்டரிகளை திருடும் நபரின் சிசிடிவி காட்சி

இந்த திருட்டுச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து திருடு போன பொருட்களை கண்டுபிடித்து தரக்கோரி வாணியம்பாடி காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிருந்த காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நகை அடகு கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி!

Intro:வாணியம்பாடியில் தொடரும் திருட்டு சம்பவங்கள்
Body:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் லாரிகளுக்கு பழுதுபார்க்கும் மற்றும் பாடி பில்டிங் ஒர்க் செய்யும் தொழில் செய்து வருபவர் குமார் இவருக்கு சொந்தமான பெருமாள் பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள லாரி பாடி பில்டிங் ஒர்க் ஷாப்பில் நேற்றிரவு புகுந்த திருடன் ஒருவன் சுமார் 70 ஆயிரம் மதிப்பிலான நான்கு லாரி பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்று உள்ளான் இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடு போன பொருட்களை கண்டுபிடித்து தர கோரி வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.