Life convict Murugan appears before court: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கரோனா ஊரடங்கின்போது பெண்கள் தனிச் சிறையில் இருக்கும் நளினியிடம் மாதத்திற்கு ஒரு முறை வீடியோ கால் மூலம் பேச சிறைத்துறை அனுமதி அளித்தது.
அப்போது வீடியோ கால் மூலம் வெளி நபர்களிடம் முருகன் பேசியதாக சிறைத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 27) வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. நீதிபதி முகிலாம்பிகை முன் ஆஜரான முருகன், அவர் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
பின்னர் சிறைத்துறையினரின் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நீதிபதி முகிலாம்பிகை, வருகின்ற 2022 ஜனவரி 10ஆம் தேதி மீண்டும் முருகனை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து காவல்துறை பாதுகாப்போடு, முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி