வேலூர்: ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து சாது சன்னியாசிகள் பாதுகாப்பு சமிதி சார்பில் 4ஆம் ஆண்டு அண்ணாமலையார் திருக்குடை விழாவானது நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் விழாவிற்கு வேலூரில் இருந்து திருக்குடைகள் அனுப்பும் நிகழ்ச்சி சிவ ஸ்ரீ பிரத்யங்கரா தாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாதுக்கள் சன்னியாசிகள் துறவிகள் பலரும் கலந்துக்கொண்டனர். இங்கிருந்து குடைகளை எடுத்துச் சென்று திருவண்ணாமலை ஆலயத்திற்கு விழாவுக்காக ஒப்படைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமி, ஜலகண்டீஸ்வரர் ஆலய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோரும் திரளான சாதுக்கள் துறவிகளும் கலந்துகொண்டனர்.
இதில் சிவன் வேடம் உள்ளிட்ட வேடங்களை அணிந்த பக்தர்கள் திருவூடல் இசைக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடினார்கள். இன்றே இந்த ஐந்து திருக்குடைகளும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: மழை வேண்டி பொம்மைக்கு செருப்படி.. தூத்துக்குடி மக்களின் விநோத வழிபாடு!