ETV Bharat / state

"நாராயணபுரம் மக்களுக்கு விரைவில் சுடுகாடு அமைக்க ஏற்பாடு" - ஆய்வில் வட்டாட்சியர் தகவல்!

வேலூர்: வாணியம்பாடி அருகே பாலத்தில் கயிறு கட்டி சடலத்தை இறக்கியது தொடர்பாக கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய சுடுகாடு அமைப்பது குறித்து வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

land aggressive
author img

By

Published : Aug 22, 2019, 9:57 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் காலனி உள்ளது. அங்குள்ள சுடுகாட்டில் போதுமான இடவசதி இல்லாததாலும் ஊருக்கான நுழைவுவாயிலில் அது இருப்பதாலும் உயிரிழந்தவர்களை எரியூட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள பாலாற்றங்கரையில் இறந்தவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது. இதன்பின் பாலாற்றின் இருகரையோரங்களிலும் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் நாளடைவில் பாலாற்றின் கரைகளை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து ஆற்றுக்கு செல்லும் வழியை, வேலி அமைத்து அடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் சடலத்தை எடுத்துச்செல்ல வழி இல்லாததாலும், விவசாய நிலங்கள் வழியாக செல்ல சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும்; தொடர்ந்து அங்குள்ள மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை எரியூட்டுவதற்காக பாலாற்றங்கரைக்குக் கொண்டு சென்று எரியூட்ட முயன்ற போது, அங்குள்ள ஆக்கிரமிப்பு செய்த நில உரிமையாளர்கள் தங்களின் விளைநிலம் வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பாடையில் கயிறு கட்டி பாலத்தின் மேல் இருந்து, இறந்தவரின் உடலை கீழே இறக்கி எரியூட்டியுள்ளனர். இச்சம்பவம் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்களை கொதிப்படையச் செய்தது. இதனிடையே இது பற்றி பாதிக்கப்பட்ட அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தங்களது குறைகளை தெரிவித்திருந்தனர். மேலும் பாலாற்றங்கரையில் இருபக்கமும் ஆற்றிற்கு செல்ல வழியின்றி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியை கையகப்படுத்தி அரசு அப்பகுதி மக்களுக்கு ஈமச் சடங்குகளை செய்ய, போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கயிறு கட்டி சடலத்தை இறக்கிய விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் நேரில் ஆய்வு

இந்த நிலையில், இன்று நாராயணபுரம் பகுதி மக்களுக்கு சுடுகாடு அமைக்க வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான குழுவினர் அக்கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து 50 சென்ட் நிலத்தை அளந்து, அதை அப்பகுதி மக்களுக்கு சுடுகாடு அமைக்க ஏற்பாடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் முருகன் உறுதியளித்தார்.

Intro:

வாணியம்பாடி அருகே கயிறு கட்டி சடலத்தை எரித்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கிராம மக்களுக்கு புதிய சுடுகாடு அமைப்பது குறித்து வாணியம்பாடி வட்டாச்சியர், முருகன் ஆய்வு.

Body: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அக்கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை பல ஆண்டுகளாக பாலாற்றில் தகனம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பாலாற்று கரையோரம் இருந்த நிலங்களை பலர் விலைக்கு வாங்கி விட்டதால், தங்கள் நிலத்தின் வழியாக இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல அந்நில உரிமையாளர்கள் அனுமதிக்காததால், இறந்தவர்களின் உடல்களை பாலாற்று மேம்பாலத்திலிருந்து கயிறு கட்டி பாலாற்றில் இறக்கி தகனம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்களன்று நாராயணபுரம் பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் இறந்துள்ளார், அவரது உடலை கயிறு கட்டி பாலத்தின் மீது இருந்து இறக்கி தகனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து செய்திகளில் இவ்விவகாரம் வெளியானதால் இக்கிராம மக்களின் நிலை அனைவருக்கும் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று நாராயணபுரம் பகுதி மக்களுக்கு சுடுகாடு அமைக்க வாணியம்பாடி வட்டாச்சியர் முருகன் நாராயணபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து 50 சென்ட் நிலத்தை அளந்து அதை நாராயணபுரம் பகுதி மக்களுக்கு சுடுகாடு அமைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

Conclusion: இந்த துரித நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.