ETV Bharat / state

பணிமாறுதல் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா! - ஆசிரியை தர்ணா

வேலூர்: சொந்த ஊருக்கு பணிமாறுதல் வழங்கக்கோரி பெண் ஆசிரியை ஒருவர் இரவு நேரத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணிமாறுதல் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!
author img

By

Published : May 28, 2019, 12:10 PM IST

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதனால் நேற்று பகல் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் பெண் ஒருவர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் ஆம்பூரை அடுத்த காமராஜர் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த நிஷ்லா என்பது தெரியவந்தது. மேலும் இவர் ஆம்பூர் சோமலாபுரம் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் தருமபுரி மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணிமாறுதல் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!

இந்நிலையில் தான் ஏற்கனவே பணிபுரிந்த சோமலாபுரம் பள்ளியில் தனக்கு இடமாறுதல் வழங்க வேண்டுமென்றும், அதனால் தான் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் நிஷ்லா தெரிவித்துள்ளார். எதுவாக இருந்தாலும் காலையில் வந்து அலுவலரைச் சந்தித்துப் பேசுங்கள் தற்போது இங்கிருந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் கூறினர். ஆனால் இடமாறுதல் உத்தரவு கிடைக்கும் வரை இவ்விடத்தை விட்டு நகர மாட்டேன் எனத் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காலை 6 மணிக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று நிஷ்லாவிடம் கூறப்பட்ட பின்பும், உத்தரவு ஆணை கிடைக்கும் வரை தர்ணாவைக் கைவிடப்போவதில்லை எனக் கூறிவருகிறார். இதனால் வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.

Intro:வேலூர்

Body:பெண் ஆசிரியர் தர்ணா

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.