திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மலங் சாலையில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா, பெண்கள் பிரிவு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும், சிஏஏ, என்ஆர்சி, சிஏபி ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் நேற்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியும், கண்டன வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி!