வேலூர்: இந்திய விடுதலை போராட்டங்களுக்கு வித்திட்ட 1806 ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சியின் 216 வது ஆண்டு இன்று(ஜூலை10) அனுசரிக்கப்படுவதையொட்டி மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள சிப்பாய் நினைவுத் தூணுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நடந்த சிப்பாய் புரட்சி வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது,"அதிமுக இன்றைக்கு 3ஆக உடைந்துள்ளது என்று சொன்னால் ஓபிஎஸ் காரணமல்ல, எடப்பாடி காரணம் அல்ல, சசிகலா காரணமல்ல ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம். ஒரு பெரிய திட்டம் தீட்டி அந்த இயக்கத்தை 3 ஆக உடைத்து தள்ளி இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி , "அக்னிபத் திட்டம் என்பது பாஜகவின் ஆள் சேர்ப்பு திட்டம் என்றும். 4 ஆண்டுகளில் அக்னிபத் திட்டத்தில் சேர்பவர்கள் துப்பாக்கியை கூட துடைக்க கற்று கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேரறிவாளன் விடுதலை குறித்து கேள்வி எழுப்பிய போது, விடுதலை செய்யலாம், அவர்களை மட்டுமல்ல 20 ஆண்டுகளில் கொலை ,கொள்ளை, கற்பழிப்பு, உள்ளிட்ட தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்துவிட்டு அங்குள்ள காவலர்களை போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். என்றும் சிறைகளை நெல், கோதுமை, குடோன்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த இடம் வீணாக கூடாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து வீடு அமைத்து அசத்திய வனத்துறை!