மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சியினரும் மாணவர்களும் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை பெசன்ட் நகரில் பெண்கள் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் வரைந்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டு வாசல் முன்பு கோலம் வரையப்பட்டது. அந்த கோலத்தில் வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: