வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையோட்டி அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து சுற்றுசூழல் துரை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்ட நிதி மத்திய அரசிடன் திருப்பி அனுப்பபட்டது என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாத ஸ்டாலின் மக்களிடையே தவறான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசிடம் நிதியை பெறுவதற்கு பேசி வருகிறோம்.
அதிமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளோம். ஆனால் திமுக ஆட்சியிலோ, வீட்டிற்கு ரூ.2000 மதிப்புள்ள டிவியை கொடுத்துவிட்டு மாதம் ரூ.150 கோடியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள் என தெரிவித்தார்.
மேலும், ‘பாலாற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலப்பதில்லை. தோல் தொழிற்சாலைகளுக்கு புதிதாக அனுமதியளிக்கப்படுவதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதிமுக ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது’ என்றார்.