வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி அருகே கே.ஆர்.எஸ். நகரிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்பாடி DSP துரைபாண்டியன் மற்றும் விருதம்பட்டு காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
சோதனையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் பதுக்கிவைக்ப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவ்வீட்டில் இருந்த எட்டு பேரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பிடிப்பட எட்டு பேரும் காட்பாடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இச்சசம்பவம் தொடர்பாக தலைமறைவாகவுள்ள மேலும் நான்கு மாணவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
குறிப்பிட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே படித்துவருகின்றனர். அப்படி இருக்கையில், மாணவர்களுக்கு 12 கிலோ கஞ்சா கிடைத்தது எப்படி அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு