இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், இன்றைய நாளுக்குத் தேவையான இறைச்சிகளை மக்கள் நேற்று இரவு வாங்கிச் சென்றனர். இதனிடையே கோழி இறைச்சியிலிருந்து கரோனா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியால், இறைச்சி விரும்பிகள் பலரும் மீன், ஆடு போன்றவற்றையே வாங்கிச் சென்றனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக இறைச்சி விற்பனையில் ஆடு, மீன்களின் விலை சற்று கூடுதலாகவே இருந்தது.
இதேபோல் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், மதுப் பிரியர்கள் நேற்று இரவே மது பாட்டில்களை முந்தியடித்து வாங்கிச் சென்றனர். வேலூர் மாவட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: 'டாஸ்மாக்கை மூடினால் கரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்