ETV Bharat / state

வேலூரில் வங்கி மேலாளர் வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனை! - IT Raid in vellore

வேலூர்: காந்திநகர் பகுதியில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில் திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். அவர்களுடன் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

it raid in bank manager house
author img

By

Published : Apr 11, 2019, 2:49 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி என்பவர் வசித்துவருகிறார். இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் திடீரென தயாநிதி வீட்டிற்கு வருமானவரித்துறை அலுவலர்கள் சென்றனர். வீட்டில் இருந்த நபர்களிடம் தாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வந்திருக்கிறோம் எனவும், வீட்டில் சோதனை செய்ய ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஏழு பேர் கொண்ட வருமான வரித்துறை அலுவலர்கள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். அவர்களுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

வேலூரில் வங்கி மேலாளர் வீட்டில் ஐடு ரெய்டு

முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு காட்பாடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஆவணங்கள் எதுவுமின்றி ஏடிஎம் எந்திரத்திற்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்டது என்று தகவல் வெளியானது. அதனடிப்படையில் வங்கி மேலாளர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் அவர் நண்பர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் மீது தேர்தல் அதிகாரி சார்பில் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் அதே காட்பாடியில் வங்கி மேலாளர் ஒருவர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த சோதனை அடுத்தடுத்து தொடரும் என வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Intro:வேலூரில் தொடரும் ஐடி ரெய்டு

கனரா வங்கி மேலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் பரபரப்பு

Body:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார் இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் திடீரென தயாநிதி வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர் அப்போது வீட்டில் இருந்த நபர்களிடம் தாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வந்திருக்கிறோம் வீட்டில் சோதனை செய்ய உள்ளோம் ஒத்துழைப்பு தாருங்கள் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர் இதையடுத்து கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஏழு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தயாநிதி வீட்டில் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சென்றுள்ளனர் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு காட்பாடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பணம் ஆவணங்கள் எதுவும் இன்றி ஏடிஎம் எந்திரத்திற்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்டது என்று தகவல் வெளியானது அதனடிப்படையில் வங்கி மேலாளர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது ஏற்கனவே வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு கல்லூரி மற்றும் அவர் நண்பர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துறையின் மகன் கதிர் ஆனந்த் மீது தேர்தல் அதிகாரி சார்பில் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சூழ்நிலையில் அதே காட்பாடியில் வங்கி மேலாளர் ஒருவர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது

Conclusion:இந்த சோதனை அடுத்தடுத்து தொடரும் என ஐடி வட்டாரத்தில் கூறப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.