ETV Bharat / state

மொழியை கற்றுக்கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது - துரைமுருகன் - imposing hindi language issue

வேலூர்: ஆயிரம் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம், ஆனால் கற்றுக் கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என  திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

dmk-duraimurukan
author img

By

Published : Sep 15, 2019, 12:12 PM IST

வேலூர் சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அவரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், தனது மகனும் வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தை மாலை அணிவிக்க வைத்தார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள், அவரிடம் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென மத்திய அரசு முயற்சிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அண்ணாவின் சிலைக்கு அவரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

அதற்கு பதிலளித்த அவர், "இதை எப்போதும் மத்திய அரசு சொல்லிக் கொண்டுதான் இருக்கும். இந்தி உள்பட அனைத்து மொழியையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மொழியை கற்றுக் கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? மொழியை கற்றுக் கொள்வது தவறில்லை; ஆனால் திணிக்கக் கூடாது" எனக் கூறினார்.

Intro:இந்தி மொழி விவகாரம்

மொழியை கற்றுக் கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது

ஆயிரம் மொழியை கற்றுக் கொண்டாலும் தவறில்லை - வேலூரில் துரைமுருகன் பேட்டிBody:பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உடல் நலம் ஒத்துழைக்காததால் துரைமுருகன் தனது மகனும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்தை மாலை அணிவிக்க செய்தார் தொடர்ந்து இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சிப்பது குறித்து துரைமுருகனிடம் கேள்வி கேட்டதற்கு, எல்லோரும் இதை தான் சொல்கிறார்கள் இதை எப்போதும் அவர்கள்(பாஜக) சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று தெரிவித்தார் தொடர்ந்து இந்தி உட்பட அனைத்து மொழியையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் பேசியிருந்தீர்களே என கேட்டதற்கு, இந்தி மொழியை கற்றுக் கொள்வதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? மொழியை கற்றுக் கொள்வது தவறில்லை ஆயிரம் மொழியை கூட கற்றுக் கொள்ளலாம் என காட்டமாக பதில் அளித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.