ETV Bharat / state

வேலூர் லத்தேரி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை

author img

By

Published : Dec 15, 2020, 8:29 PM IST

வேலூர் லத்தேரி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேலூர் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

illegal diesel sale in vellore
வேலூர் லத்தேரி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை

வேலூர்: லத்தேரி பகுதியில் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளிலும், டிராக்டர்களிலும் வைத்து தரமற்ற எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சந்திரசேகரன் நம்மிடையே பேசுகையில், "டீசல் என்ற பெயரில் தரமற்ற ரசாயன பொருளை தனியார் நிறுவனங்கள் வட இந்தியப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்துவருகின்றன.

இதனால், மாநில அரசாங்கத்திற்கான வருவாயில் ஒரு லிட்டர் டீசலுக்கு 15 ரூபாய் வரையிலும், மத்திய அரசிற்கு 35 ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற பெட்ரோலியப் பொருள்களை எக்ஸ்ப்லோசிவ் லைசன்ஸ் பெறாத இடங்களில் இறக்குவது சட்டவிரோதமானது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மிகப்பெரிய அபாயம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

சமீபத்தில், சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இவை அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவந்தது. அந்த மாவட்டத்திலுள்ள சங்கங்களின் முயற்சியால் விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு விற்பனை செய்ய இயலாததால் தற்போது, வேலூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, "இந்த புகார் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. விசாரணை மேற்கொண்டுவருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிலளித்தார்.

இதையும் படிங்க: ரஜினி பிறந்தநாளன்று இலவச ஆட்டோ சவாரி வழங்கிய ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.