ETV Bharat / state

அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை எங்கு? - ஹெச்.ராஜா பதில் - today news

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வராததற்கு காரணம் திமுகதான் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் பேட்டி

author img

By

Published : Jul 19, 2023, 7:54 AM IST

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சியில் பேட்டி

திருச்சி: வண்ணாரப்பேட்டை பாஜக அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டெல்டா விவசாயிகள் வாயில் மண்ணை கொட்டி உள்ளது, காங்கிரஸ் கட்சி. கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று கூறிய காங்கிரஸ் கட்சியை சம்பிரதாயத்துக்காக கூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமாருக்கு பாத பூஜை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் சென்று உள்ளார். மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என தெளிவான முடிவில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருந்தது. காவிரி தண்ணீர் வராததற்கு காரணம் திமுகதான். அப்போது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி கண்டு கொள்ளாமல் தமிழ்நாட்டை அழிப்பதற்காக கர்நாடகாவில் பல அணைகளை கட்ட அனுமதித்தார்.

அதுபோல்தான் இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார். உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது பாஜக வழக்கு தொடரவில்லை. ஏற்கனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில்தான் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.

இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அமலாக்கத் துறைக்கு வந்துள்ள ஆதாரங்கள் மற்றும் தகவல் அறிக்கையின் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்து அமலாக்கத்துறை சோதனை திருச்சியா, தூத்துக்குடியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அமலாக்கத்துறை சோதனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபடுகிறது. ஆடி 1ஆம் தேதி பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்றது.‌

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் 19 ஆயிரம் கோடி சிக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக அமைச்சர்கள் மீது சோதனை நடத்தவில்லை. குளித்தலையில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வரும், அப்போது செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்வார் என்றார். ஆனால் செய்யவில்லை. மு.க ஸ்டாலின் செய்யாததை அமலாக்கத்துறை செய்து உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்து பாஜக தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை” என கூறினார்.
பின்னர் தருமபுரி எம்.பி செந்தில் குமார் இந்து மத கடவுள் சிவன், பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, “ஈ.வெ.ரா.பெரியாருக்கும், மணியம்மைக்கும் திருமணம் நடந்தது. ஆனால், அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அப்போது அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ED RAID: முறைகேடாக சம்பாதித்த பணத்தில் வெளிநாட்டில் சொத்து - சிக்கிய அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.