வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தனது முழு கொள்ளளவான 261.36 மில்லியன் கன அடியை எட்டியது. மேலும் அதிலிருந்து 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், நிவர் புயலினால் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக மோர்தானா அணையிலிருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருவதால் குடியாத்தம் நகருக்குள் பாயும் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் அபாயகரமான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கை எச்சரிக்கும் வகையில், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசு அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வழிப்பறி கும்பலின் வெறிச்செயல்... இளைஞர் கொடூரமாக கொலை!