ETV Bharat / state

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காலமானார்! - gudiyatham DMK MLA Passed away

dmk-mla-passed-away
dmk-mla-passed-away
author img

By

Published : Feb 28, 2020, 9:45 AM IST

Updated : Feb 28, 2020, 10:21 AM IST

09:41 February 28

குடியாத்தம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் இதய நோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் உடல் நலக் குறைவால்  இன்று காலமானார். திருமணமே செய்துகொள்ளாத காத்தவராயனுக்கு வயது 58. கடந்த ஒரு மாதகாலமாக இதய அறுவைச் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் காத்தவராயன் சிகிச்சை பெற்று வந்தார். இதய அடைப்பு காரணமாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டிருந்தது. இந்தச்சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று காத்தவராயன் உயிரிழந்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற இவர், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். கட்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும் வேலூர் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.  

நேற்று திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு திமுக சட்டப்பேரவை உறுப்பினரான காத்தவராயன் காலமாகியுள்ளார். இரு நாள்களில் இரு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயிரிழந்தது அக்கட்சியினர் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க:

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி மறைவு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Last Updated : Feb 28, 2020, 10:21 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.