வேலூர் நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "வருகிற மக்களவைத் தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல். சிறுபான்மையினரை பற்றி பேச திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. தேர்தலுக்குப்பிறகு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் செயல்படும். அதற்கான உறுதியான கூட்டணி தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதி ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகும் அதை மேலும் சிறப்பிக்க அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்" என்றார்.