வேலூர்: பாகாயம் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. நேற்று (ஜூலை. 20) இக்கோயில் வளாகத்தில் இருந்த ஒன்றரை அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட விநாயகர் கற்சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியுள்ளனர்.
இன்று (ஜூலை. 21) காலை பொதுமக்கள் கோயிலுக்கு வந்தபோது, விநாயகர் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீயா? நானா? அடித்து காட்டிய கோயில் பூசாரிகள்!