தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், வேலூர் கோட்டையில் உள்ள நேப்கோ அச்சக அலுவலக வளாகத்தில் அச்சக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இலவசமாக கரோனா தடுப்பூசி முகாம் நேற்று (ஏப். 15) நடைபெற்றது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். இந்த முகாமில் 150 அச்சக உரிமையாளர்கள், அச்சகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா: வழக்கு விசாரணைகள் இனி ஆன்லைனில் மட்டுமே!