கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு அதிகபட்சமாக 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வேலூர் அடுத்த செங்கல்நத்தம் மலைப்பகுதியில் நேற்று (மார்ச்9) மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மலையின் ஒரு மூலையில் ஏற்பட்ட காட்டுத் தீ, காற்று வீசியதன் காரணமாக மளமளவென மலை முழுவதும் பரவியது. இது தொடர்பாக வேலூர் சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த வனத்துறையினர் தீயை அணைக்க முயன்றனர்.
இதனிடையே, வேகமாக தீ பரவியதால் அணைக்க முடியவில்லை. இதனால் பல ஏக்கர் பரப்பளவிற்கு தீ பரவி மரங்கள், செடிகள், பறவைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. செங்கல்நத்தம் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதையும் படிங்க:குளம் போல் சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடைக் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி!