வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சேரந்தவர் யோகானந்தம். இவரது சிகிச்சை முறைகளில் சந்தேகமடைந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.
இதனடிப்படையில், குடியாத்தம் வட்டாட்சியர் வத்சலா தலைமையிலான வருவாய் துறையினர் மேற்கொண்ட சோதனையில் இவர் போலி மருத்துவர் என்பதும், மருத்ததுவம் படிக்காமலே தனியாக வெங்கடேஸ்வரா கிளினிக் என்ற பெயரில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் யோகானந்தத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:பேரிடர் காலங்களில் அதிகரிக்கும் போலி செய்திகள்!