வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வேலூர் கோட்டை முன்பு இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அப்போது பலர் டாட்டா ஏசி லோடு ஆட்டோக்களிலும் மினி லாரிகளிலும் மாடுகளை போல் அடைத்து வைத்து அழைத்து வரப்பட்டது பரிதாபமாக இருந்தது.
இந்நிலையில் தாமதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கானா பாடல் ஒன்று இசைக்கப்பட்டது. இதைக் கேட்டதும் பெண்கள் சிலர் தங்களை அறியாமல் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டனர். இதுபார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் அமைந்தது. அரசு நிகழ்ச்சியில் பெண்கள் குத்தாட்டம் போட்ட சம்பவம் அந்த பரபரப்பாக பேசப்பட்டது.