ETV Bharat / state

காத்தவராயனுக்கு அஞ்சலி: கண்ணீர் விட்ட துரைமுருகன்!

வேலூர்: குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துரைமுருகன், செய்தியாளர் சந்திப்பிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

கத்தவராயனுக்காக கதறி அழுத துரைமுருகன்
கத்தவராயனுக்காக கதறி அழுத துரைமுருகன்
author img

By

Published : Feb 28, 2020, 9:30 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பேர்ணாம்பட்டு பஜார் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் நேரில் வந்து காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களிடம் துக்கம் விசாரித்தார்.

அதைத்தொடர்ந்து துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “திமுகவுக்கு கடந்த இரு நாட்களாக சோதனை காலம். ஏற்கனவே திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவை இழந்துவிட்டோம். தற்போது குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயனை வாரி கொடுத்துள்ளோம். இவர் மிகவும் எளிமையானவர் கடைசிவரை குடிசை வீட்டில் தான் வாழ்ந்தார்” எனக் கூறினார்

கத்தவராயனுக்காக கதறி அழுத துரைமுருகன்

அப்போது திடீரென துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும் பேசிய அவர், “காத்தவராயன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். நேற்று அவரை மருத்துவனையில் பார்த்தபோது, அவர் எங்களை கைகூப்பி வணங்கினார். நாளை அவரது இறுதிச் சடங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.